ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் மீது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் உள்ள ஹிந்தி ரசினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஷாரூக்கான் நடித்து கடைசியாக வெளிவந்த 'பதான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்குப் பின்பு வரும் படம் இது. மேலும், தமிழில் விஜய் நடிக்க சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ முதல் முறையாக ஹிந்தியில் இப்படத்தை இயக்குவதால் பாலிவுட்டினரும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் தயாராகி சென்சார் ஆன நிலையில் அடுத்த சில தினங்களில் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அதற்கான அறிவிப்பும் வெளியானது. நாளை ஜுலை 10ம் தேதி காலை 10.30 மணிக்கு டிரைலரை வெளியிட உள்ளார்கள். அதற்கு 'ஜவான் பிரிவியூ' என பெயர் வைத்துள்ளார்கள். பிரிவியூ என்பதை ஆங்கிலத்தில் 'Preview' என்றுதான் எழுத வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பில் அதை 'Prevue' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஏதும் குறியீடு இருக்கிறதா என்பது நாளை தெரிந்துவிடும்.
வியாபாரம் இத்தனை கோடியா?
வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் தியேட்டர் உரிமையை தவிர்த்து மற்ற உரிமைகளை பிஸ்னஸ் செய்துள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல், சாட்லைட், ஆடியோ உரிமைகளை சுமார் ரூ. 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.