இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது |
ஆப்கானிஸ்தான் நாடு இப்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அங்குள்ள பெண்களை அடிமைகள் போன்று நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் பெண்களை கட்டாய திருமணம் செய்து வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்திருப்பதை இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் பிரிவுகள் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.