ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தலிபான் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ஒப்பிட்டுப் பேசிய பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம், என, மஹாராஷ்டிர மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கடம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும், பாலிவுட் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், நேற்று முன்தினம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் முழுதும் உள்ள வலதுசாரி அமைப்புகளுக்கு ஒரே விஷயம் தான் இலக்காக இருக்கும். உதாரணத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். தலிபானுக்கு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் ஹிந்துக்களுக்கான நாட்டை உருவாக்க வேண்டும் என, இங்கு சிலர் எண்ணுகின்றனர். தலிபான் அமைப்பினர் கொடூரமானவர்கள்; அவர்களது செயல்கள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கும். அதேபோல் தான் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளை ஆதரிப்போரும் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மஹாராஷ்டிர எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான ராம் கடம் கூறியதாவது:சங் பரிவார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஜாவேத் அக்தரின் கருத்து, வலியையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு கூறுவதற்கு முன், நம் நாட்டில் ஆட்சி புரிவது இதே கொள்கையை பின்பற்றுவோர் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். தலிபான் கொள்கையை பின்பற்றுவோர் ஆட்சி புரிந்திருந்தால், இது போன்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருப்பாரா?தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வரை, அவர் பணிபுரியும் எந்தவொரு படத்தையும் திரையிட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.