காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
ஆப்கானிஸ்தான் நாடு இப்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அங்குள்ள பெண்களை அடிமைகள் போன்று நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் பெண்களை கட்டாய திருமணம் செய்து வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்திருப்பதை இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் பிரிவுகள் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.