பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
'சர்காரு வாரி பாட்டா' படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்துக்கு 'குண்டூர் காரம்' என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் தலைப்புடன் கூடிய முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் தலையில் ஸ்டைலாக துண்டை கட்டிக்கொண்டு கையில் குச்சி ஒன்றை சுழற்றியபடியே இன்ட்ரோ கொடுக்கிறார் மகேஷ்பாபு. அடுத்து பீடியை பற்ற வைத்துக் கொண்டே ஜீப்பை பறக்க விடுகிறார். வில்லன்களை போட்டு பொளக்கிறார். மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு பிடித்தமான அதிரடி ஆக்ஷன் படம் என்பதை கிளிம்ப் வீடியோ காட்டுகிறது. இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.