ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'காந்தாரா'. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இந்த படம் வெளியாகி தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இந்த படத்தை இயக்கியும் இருந்தார். இரண்டு தேசிய விருதுகளையும் இந்த படம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'காந்தாரா சாப்ட்டர் 1' என்ற பெயரில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கொல்லூர் அருகே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அதில் பங்கேற்று நடித்து வந்த கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த சவுபர்னிகா ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார் என்று சொல்லப்பட்டது. இதனால் காந்தாரா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் படத்தை தயாரித்து வரும் பிரபலமான ஹோம்பலே நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இது குறித்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “துணை நடிகர் கபிலின் மரணம் துரதிர்ஷ்ட வசமானது என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் இந்த சம்பவம் காந்தாரா படப்பிடிப்பு சமயத்தில் நடக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த சம்பவம் நடந்த அன்று அவர் தனது நண்பர்களுடன் ட்ரிப் சென்றுள்ளார். அந்த சமயத்தில் தான் அவர் சவுபர்னிகா ஆற்றில் குளிக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றது. அவர் நீந்தி கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனால் தயவு செய்து இந்த நிகழ்வையும் காந்தாரா படப்பிடிப்பையும் யாரும் தொடர்புபடுத்தி பேச வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.