சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகை திவ்யா ஸ்ரீதர், செவ்வந்தி சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன்காரணமாக சில நாட்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. அவர் சீரியலை விட்டு விலகிவிட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தனது கைக்குழந்தையுடன் திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தையுடன் கெத்தாக காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அம்மா செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்குச் செல்கிறேன்', எனப் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.