இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த திருமணத்தின் மூலம் ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதனையடுத்து அர்னவை அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு தற்பொது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியே வசித்து வந்த திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் தான் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கூட செய்திருந்தனர். இந்நிலையில், திவ்யா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவிட்டுள்ள திவ்யா, குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்த படி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாய் சேய் நலமாக இருக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.