‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

மருத்துவர் ஷர்மிளா காலப்போக்கில் சின்னத்திரை சீரியல்களிலும் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்து நடிகையாக பிரபலமானார். சமீபகாலங்களில் அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள ஷர்மிளா, கல்லூரிக்கும் பேராசிரியருக்கும் ஆதரவாக பேசிவரும் பிக்பாஸ் அபிராமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் அதை பற்றி குற்றம் சொல்கின்றனர்' என அபிராமி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ஷர்மிளா, இதன் மூலம் கலாஷேத்ரா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானது. இதில் கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? என்பது போல் அபிராமி பேசியிருக்கிறார். அபிராமியின் இந்த பேச்சு அவரது ஆணவத்தை தான் காட்டுகிறது. மத்திய அரசு தரும் நிதியில் தான் கலாஷேத்ரா செயல்படுகிறது. எனவே, கேள்வி கேட்க்ககூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என ஷர்மிளா கூறியுள்ளார்.