எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து | சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் படங்கள் மோதல் |

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான த்ரிஷாவை விடவும், மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் மீது அதிக ஆர்வம் உடையவர் என்பதை இன்று நடைபெற்ற 'தக் லைப்' விழாவில் வெளிப்படுத்தினார் நடிகை அபிராமி.
'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த அபிராமி, தற்போது 'தக் லைப்' படத்தில் அவருடன் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தேசிய அளவிலான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனால், படக்குழு சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மேடையில் இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தார்.
முதலில் பேசிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது என்று சொல்லிவிட்டு, தமிழில் மட்டுமே பேசினார். அடுத்து பேசிய அசோக் செல்வனும் தமிழில் பேசி சில வரிகள் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து பேசிய நடிகை அபிராமி, சென்னையில் நடக்கும் விழாவில் தமிழில் பேசாமல் எப்படி, என தமிழில் மட்டுமே பேசினார். ஆனால், அடுத்து பேசிய த்ரிஷா தமிழில் ஆரம்பித்து விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். இடையிடையே மட்டும் தமிழில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
சிம்பு ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசி, கொஞ்சமாக தமிழில் பேசினார். கமல்ஹாசன் ஆங்கிலம், தமிழ் என மாறி மாறிப் பேசினார். மணிரத்னம், ஏஆர் ரகுமான் ஆங்கிலத்தில் சில வரிகள் மட்டுமே பேசி சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் எதுவுமே பேச மாட்டேன் என மறுத்துவிட்டார்.




