அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் படம் ஜுன் 5ல் ரிலீஸாகிறது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தக் லைப் படத்தில் பல காட்சிகள் இருந்தாலும் கமல், அபிராமி முத்தக்காட்சிதான் பேசப்பட்டது. இந்த வயதில் கமலுக்கு இதுதேவையா என்று பலர் விமர்சனம் செய்தனர். இது குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் அபிராமி.
அதில், 'அந்த காட்சியை படத்தில் பார்த்தால் அதன் முக்கியத்துவம் தெரியும். நீங்கள் நினைப்பது போன்ற முத்தக்காட்சி அது இல்லை. சில வினாடிகள் மட்டுமே இடம் பெறும். டிரைலரில் இடம் பெற்றதால் வைரல் ஆகிவிட்டது. அந்த காட்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. மற்ற நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தது இல்லையா? ஒரு பிரபல நடிகர் நடித்ததால் இப்படி பேசுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம்' என்று கூறியுள்ளார்.
21 ஆண்டுகளுக்கு பின், அதாவது விருமாண்டி படத்திற்கு பின் கமலுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார் அபிராமி.