மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும். தமிழக அரசு சார்பில் அந்த விழா நடக்கும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஏனோ சினிமா விழாவில் கலந்து கொண்டது இல்லை. அதேப்போல் துணை முதல்வர் ஆன பின் சினிமா நிகழ்ச்சிகளை உதயநிதியும் தவிர்க்கிறார். ஆனால் அரசு விழா என்பதால் இருவரும் இளையராஜாவின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னணி நடிகர்களும் வருவார்கள்.
தமிழ் சினிமாவில் முக்கியமான விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த விழா தள்ளிப்போய் உள்ளது. ஜூன் 3ம் தேதிதான் இளையராஜாவுக்கு பிறந்தநாள். ஆனால், அன்றைய தினம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக தனது பிறந்தநாளை இளையராஜா கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.