மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
சென்னை : தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் படம் மட்டுமே 200க்கும் மேல் வெளியாகிறது. மற்ற மொழி படங்கள் 100க்கும் மேல் வெளியாகிறது. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கேளிக்கை வரை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைத் துறையினர் வருத்தம் தெரிவித்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், ''புதிய தமிழ் படங்களுக்கு தற்போதுள்ள 8 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய தமிழ் படங்களுக்கு தற்போதுள்ள 7 சதவீத வரி, 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கும் முன்னெடுத்த கமலுக்கும் நன்றி,'' என்றார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான காலக்கட்டத்தில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அலைபேசி வாயிலாக செயலிகளில் படங்களை காணப் பழகி வரும் ரசிகர்களை தியேட்டர் நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல முகாந்திரமாகவும் அமையும்' என்றார். மேலும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினரும் மற்ற திரைத்துறையினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.