போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
கேரளாவின் மலைவாழ் மக்களுக்கு அரிகொம்பன்(நம்மூரில் அரிசி கொம்பன்) என்றாலே குலை நடுங்கம். காரணம் கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களை அச்சுறுத்தி வந்த முரட்டு யானைதான் அரிக்கொம்பன். விளைநிலங்களில் புகுந்து, கடும் சேதத்தை விளைவித்தது. வீடுகள், ரேஷன் கடைகளையும் தாக்கி சேதப்படுத்தியது. 20 பேரை கொன்றுள்ள இந்த யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, காட்டுக்குள் விடப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தின் மேகமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரிகொம்பன் யானையின் நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட வன அலுவலர் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். இரு தினங்களுக்கு முன் இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டு பகுதியை நோக்கி நகர்ந்ததாக கூட தகவல் வந்தது. இந்நிலையில், இந்த யானையின் கதையை மையமாக வைத்து 'அரிகொம்பன்' என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படம் உருவாகிறது. சஜித் யாஹியா இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரிகொம்பனுக்கான நீதியை பேசும் படமாக இது உருவாகிறது. அரிகொம்பனின் வழியை மறித்தோம், அவனது வாழ்விடங்களை அழித்தோம், இந்த பூமியில் வாழும் உரிமை படைத்த உயிரினங்களுக்கு மனிதன் செய்யும் துரோகங்களை பற்றிய படம் இது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இலங்கையில் உள்ள சிகிரியா காட்டு பகுதியிலும், இடுக்கி மாவட்ட மலைப் பகுதிகளிலும் படமாக இருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மேலும் சில யானைகளின் கதையும் படத்தின் ஒரு பகுதியாக ஆவணப்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரிக்கொம்பன் சரியான படமாக வரும். நமக்குத் தெரிந்த ஒரு நிகழ்வைக் காட்டுவதன் தாக்கம் மிகப்பெரியது. நாங்கள் அதை நோக்கி செயல்படுகிறோம். என்றார்.