''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் நிவின்பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஓம் சாந்தி ஒசானா. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜூட் ஆண்டனி ஜோசப். அதைத்தொடர்ந்து இவருக்கு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதனால் டைரக்சனை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்கிற பெயரிலேயே ஒரு படத்தை இயக்கி கடந்த வாரம் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பது கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த படத்தில் பிரதான கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “இந்த வெற்றியை நாங்கள் ரொம்பவே போரடித்தான் பெற்றுள்ளோம். பல கஷ்டங்களையும் வலிகளையும் சில துரோகங்களையும் சந்தித்து தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம். இதற்கு முன்னதாக எனது தயாரிப்பில் என்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் இயக்குவதாக ஒரு படத்தை துவங்கினேன். அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இளம் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் என்பவரைத்தான் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன்.
அந்த சமயத்தில் தனது தங்கையின் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்று கூறி என்னுடைய இணை தயாரிப்பாளரான அரவிந்த் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கினார் ஆண்டனி வர்கீஸ். ஆனால் அதன்பிறகு அந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அந்த அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை நினைத்து நானும் நண்பர் அரவிந்த்தும் பல நாட்கள் கதறி அழுதுள்ளோம்.
சமீப நாட்களாக படப்பிடிப்புகளில் கதாநாயகர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்கிற செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்துவதை விட மோசமானது இது போன்ற நடிகர்களின் ஏமாற்றும் நம்பிக்கை துரோகமும் தான்” என்று பரபரப்பான ஒரு தகவலை கூறியுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக மறுநாளே பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ஆண்டனி வர்கீஸ் கூறும்போது, “தற்போது கிடைத்துள்ள வெற்றியால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என் மீது தவறான தகவல்களை கூறி வருகிறார். என் தங்கையின் திருமணத்திற்காக நான் பணம் வாங்கியதாக சொல்வது தவறு.
அதுமட்டுமல்ல அவர்களிடம் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய தொகையை என் தங்கையின் திருமணத்திற்கு முன்பே அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேன். அவர்கள் சொன்ன கதையில் இடைவேளைக்கு பிறகு சில மாற்றங்களை செய்யும்படி கூறினேன். ஆனால் அதற்கு அவர்கள் என் மீது கோபப்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகினேன். தற்போது உண்மையை மறைத்து தவறான தகவல்களை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் கூறி வருகிறார். இது என்னை மட்டுமல்ல, தற்போது என் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.. அவர்களால் வீட்டை விட்டே வெளியில் செல்ல முடியவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.