ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா படத்தில் நடித்து வருகிறார். ஜஸ்வர்யா லஷ்மி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர் வருகின்ற ஓணம் பண்டிகையில் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அறிவித்துள்ளனர். இதுவரைக்கும் வெளிவந்த மலையாள படங்களிலே அதிக விலைக்கு வியாபாரம் ஆனது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் தான். சுமாராக ரூ. 6 கோடிக்கு பிஸ்னஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அதிக விலைக்கு ஹிருதயம் படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 2 கோடிக்கு பிஸ்னஸ் ஆனது குறிப்பிடதக்கது.