அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் |
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மக்களின் மனதில் இடம்பிடித்தார். சின்னத்திரை, சினிமா என பிசியாக வலம் வரும் ஜி.பி.முத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4-லும் காமெடியில் கலக்கி வருகிறார். ஜி.பி.முத்துவிற்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் பலரும் பதட்டத்துடன் 'தலைவருக்கு என்ன ஆச்சு?' என நலம் விசாரித்து வருகின்றனர்.