பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் தனது கட்டுமஸ்தான உடல்தோற்றத்தை கொண்டு ஆன்-ஸ்கீரீனில் பெர்பார்மன்ஸில் மிரட்டுவார். எந்த கதாபாத்திரத்திற்கும் கட்சிதமாக பொருந்தும் அவரது உருவமைப்பு. ஆனால், திடீரென ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியாகி பார்ப்பதற்கே பரிதாபமாக மாறிவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆயிற்று? என சோகமாக கேட்டு வந்தனர். இது தொடர்பாக ரோபோ சங்கரின் மனைவி மற்றும் சக நடிகரான போஸ் வெங்கட்டும் பட வாய்ப்பிற்காக தான் சங்கர் உடல் எடை குறைத்திருப்பதாக விளக்கமளித்தனர். எனினும் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்த வதந்தி தொடர்ந்து சுற்றிக்கொண்டே தான் இருந்தது.
இந்நிலையில், விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்காக ரோபோ சங்கர் மேக்கப் போடும் வீடியோவை அவரது மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், உடல் மெலிந்திருந்தாலும் கட்டுமஸ்தான தேகத்துடன் இருக்கும் ரோபோ சங்கர் கெத்தாக போஸ் கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு ஒன்றுமில்லை என்று திருப்தி அடைந்தாலும், 'எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே' என வருத்தப்பட்டு வருகின்றனர்.