டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மேடை நிகழ்ச்சி துவங்கி, சின்னத்திரையில் ஜொலித்து அப்படியே வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர் ரோபோ சங்கர். உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு காலமானார். 46 வயதில் அவர் மரணத்தை தழுவியது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை, மேடை கலைஞர்கள் என பலரும் அவருக்கு அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் அஞ்சலி
ரோபோ சங்கர் உடல் அஞ்சலிக்காக சென்னை, வளசவராக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் மா சுப்ரமணியம், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
வெள்ளித்திரை, சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி
தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, தாமு, எம்எஸ் பாஸ்கர், எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யராஜ், செந்தில், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், வையாபுரி, போஸ் வெங்கட், பிரியா பவானி சங்கர், ரேகா, சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், கருணாகரன், சூரி, கலையரசன், வேல் முருகன், இமான் அண்ணாச்சி, சாண்டி மாஸ்டர், லொள்ளு சபா ஜீவா, மதுமிதா, காதல் சுகுமார், இளவரசு, கிங்காங், அனுராதா, அந்தோணிதாசன், இயக்குனர் பொன்ராம், யுகேந்திரன், டி.சிவா, ரியோ, பரத், டிஎஸ்கே, கேபிஒய் பாலா, அமுதவாணன், நளினி, பாடகர் மனோ, பாடலாசிரியர் சினேகன், ஷாலு ஷம்மு, முத்துக்காளை, சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பரத் மற்றும் நிர்வாகிகள், நடிகர்கள் ராஜ்கமல், நாஞ்சில் விஜயன், தங்கத்துரை, புகழ், ராமர், தாடி பாலாஜி, ஆர்த்தி, கணேஷ், அப்புக்குட்டி, விஜே அர்ச்சனா, அழகு, கூல் சுரேஷ், சஞ்சீவ், ராஜ் மோகன், கிரேஸ், மதுரை முத்து, கேபிஒய் தீனா, சேது, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.