டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மேடை நிகழ்ச்சி துவங்கி, சின்னத்திரையில் ஜொலித்து அப்படியே வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர் ரோபோ சங்கர். காமெடியனாக பல படங்களில் நடித்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். சென்னை வளரசவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவு குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ரோபோ சங்கர் செப்., 16ம் தேதியன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப்போக்கு அதிகம் இருந்தது. மேலும் உள் உறுப்புகளும் செயல் இழந்து, வயிற்றுப் பகுதியிலும் தீவிரமான பிரச்னைகள் இருந்தன. அந்தச்சூழலில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்காமல் செப்., 18 அன்று இரவு 9:05 மணிக்கு உயிரிழந்தார்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.