என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

காமெடி நடிகர் ரோபோ சங்கர், 46, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று இரவு காலமானார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வெள்ளித்திரை கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமலின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர். இந்நிலையில் ரோபோ சங்கர் மறைவுக்கு நேற்று முதல் ஆளாய் இரங்கல் தெரிவித்த கமல் இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். கமல் வந்ததை பார்த்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பா யார் வந்து இருக்கானு பாருப்பா.... என்று கதறிய காட்சிகள் அங்கு இருந்தவர்களை மட்டுமல்ல, அந்த வீடியோவை பார்த்தவர்களையும் கண்கலங்கச் செய்தது.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் கமல் பிறந்தநாளை தொடர் கொண்டாட்டமாக நடத்த இருந்தார். அதுவும் அவரின் நிறைவேறாத ஆசையாகிவிட்டது.