விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீரியல்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'. இதில், நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ், கவிதா, நிதின் ஐயர், விஷ்னுகாந்த் மற்றும் சுஷ்மா நாயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல், ஹீரோ தீபக் குமார் வெளியேறிய பின் சற்று தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து இந்த சீரியலுக்கான ஸ்லாட் இரவிலிருந்து மதியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சீரியல் 565 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நிறைவு பகுதிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் 'என்றென்றும் புன்னகை' தொடரின் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.




