சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இப்போதும் கூட தெலுங்கில் விடாப்பிடியாக இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக அதிரடி காட்டி வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா.. அந்தவகையில் தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று அகோரி வேடம்.. போயப்பட்டி சீனு இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பவர் சாந்த சொரூபியாக தோற்றம் அளிக்கும் நடிகர் மேகா ஸ்ரீகாந்த். ஆனால் பாலகிருஷ்ணாவின் தோற்றத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக வில்லனின் தோற்றமும் இருக்க வேண்டும் என்பதால் ஸ்ரீகாந்த்துக்கு நாற்பது விதமான டிசைன்களில் கெட்டப்புகளை வரைந்து அதில் ஒன்றை தேர்வு செய்தார்களாம். அதனால் தான் பாலகிருஷ்ணாவின் லுக்கை வெளியிட்டவர்கள் ஸ்ரீகாந்தின் லுக்கை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம்.




