பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
பாகுபலிக்கு இணையான தற்போது ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததோடு தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தை 2022 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடப் போவதாக கூறி வந்த ராஜமவுலி, அதையடுத்து வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்போவதாக கூறி வந்தவர் இன்னமும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை பிரமாண்டமாக இயக்கப்போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதிவிட்டநிலையில் தற்போது திரைக்கதை வசனம் எழுதும் பணிகளை ராஜமவுலி தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை கே.எல்.நாராயணா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.