Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வார்த்தைகளை மாற்றி போட்டதால் சங்கடத்துக்கு ஆளான அல்லு அர்ஜுன்

02 அக், 2021 - 20:18 IST
எழுத்தின் அளவு:
Fans-trolled-allu-arjun

தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவரான சாய் தரம் தேஜ் நடித்துள்ள ரிபப்ளிக் என்கிற படம் நேற்று ரிலீசாகி இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பாக சாய் தரம் தேஜ் மோட்டார் பைக்கில் அதிவேகமாக சென்றபோது விபத்துக்கு உள்ளானார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவரது படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

அந்த விதமாக நடிகர் அல்லு அர்ஜுன் ரிபப்ளிக் படத்தை புரமோட் பண்ணும் விதமாக தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். ஆனால் அதுதான் இப்பொழுது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி அல்லு அர்ஜுனுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. அந்த டுவீட்டில், "துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சாய் தரம் தேஜ் இதை பார்ப்பதற்கு இங்கே இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு அவர் இவ்வாறு கூறியிருந்தாலும் பொதுவாக ஒருவர் உயிரோடு இல்லாதபோது தான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள், அதனால் அல்லு அர்ஜுன் எப்படி இந்த வார்த்தைகளை கூறலாம் என்று சாய் தரம் தேஜின் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கினார் ராஜமவுலிமகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கான ... மோகன்லாலின் ப்ரோ டாடி படமும் ஓடிடி ரிலீஸ் தான் மோகன்லாலின் ப்ரோ டாடி படமும் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04 அக், 2021 - 07:07 Report Abuse
NicoleThomson கெக்கே பிக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in