'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரிக்கிறார். இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம்..
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாவுக்கு வருகை தந்த நடிகர் பாலகிருஷ்ணா சர்ப்ரைஸாக விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தற்போது அகண்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட பாலகிருஷ்ணா ஓய்வுக்காக கோவா வந்தபோது, லைகர் படப்பிடிப்பு நடப்பது குறித்து கேள்விப்பட்டு அங்கு விசிட் அடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது பாலகிருஷ்ணா தனது அகண்டா' படத்திற்காக இளைஞர்களை கவர, செய்துள்ள விளம்பர யுக்திகளில் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.