AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கும், ஷங்கருக்கும் இடையே பிரச்சினை வந்ததை அடுத்து படத் தயாரிப்பு வேலைகள் நின்று போய் உள்ளன.
சமீபத்தில் லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்தித்து ஷங்கர் பேசிய பிறகு பிரச்சினைகள் தீர்ந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், ஷங்கர் மீண்டும் தெலுங்குப் படம் பக்கம் சென்றதால் லைகா தரப்பில் கோமடைந்து படப்பிடிப்பை துவக்கும் வேலைகளை மீண்டும் தள்ளிப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்திற்கு படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் மூலம் ஒரு பிரச்னை வந்துள்ளது. கடந்த சில நாட்களாக காஜல் கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் நடிக்க இருந்த 'தி கோஸ்ட்' என்ற படத்திலிருந்து விலகிவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் கர்ப்பமாக இருக்கும் தனக்கு சரியாக இருக்காது என காஜல் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படத்திற்காக 60 சதவீதக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் 40 சதவீதக் காட்சிகளைப் படமாக்க வேண்டும். அப்படியிருக்கையில் உடனடியாக படத்தை ஆரம்பித்தால்தான் காஜல் அகர்வால் நடிக்க முடியும். இல்லையென்றால் அவர் குழந்தை பெற்றுத் திரும்பும் வரை காத்திருக்க வேண்டும். காஜலுக்காக தங்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து ஷங்கரும், லைக்காவும் இறங்குவார்களா என்பது சந்தேகம்தான்.
காஜலை படத்திலிருந்து நீக்கினாலும், அவர் நடித்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும். அதற்கு பெரும் செலவாகும். இந்த சூழ்நிலையில் 'இந்தியன் 2' நிலை என்னவாகும் என்பதை இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது. எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களா 'இந்தியன் 2' இப்படி இழுத்துக் கொண்டே போகிறது என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள்.