கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான படம் லூசிபர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. என்றாலும் இதனுடன் முதன்முறையாக லைகா நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தின் தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் பணிகளில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. காரணம் லைகா நிறுவனத்தின் முந்தைய படங்களுக்கு வியாபார ரீதியாக ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அது எம்புரான் பட ரிலீஸிலும் எதிரொலிக்கிறது என்பதால் அதன் ரிலீஸ் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் லைகா நிறுவனத்தை இந்த வியாபாரத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு மோகன்லாலின் ஆசிர்வாத் நிறுவனமே ரிலீஸ் பணிகளை முழுமையாக கையில் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் தடையின்றி வெளியாகும் என்பதை குறிப்பிடுவது போல, தற்போது படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கொண்டு உள்ளார்.