அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா |

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வரும் மலையாள நடிகர் மம்முட்டி கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென்று நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மம்முட்டியின் பிஆர்ஓ அந்த செய்தியை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். நோன்பு முடிந்ததும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.