நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் மிகப் பிரம்மாண்டமான, அதிக பொருட்செலவில் தயாரான படங்கள் வரக் காரணமாக இருந்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். தமிழில் '2.0, பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய இரு பெரும் படங்கள் அதற்கு ஓர் உதாரணம். அவை மட்டுமல்லாது மேலும் சில படங்களை இணைந்து தயாரித்தும், தனியாக தயாரித்தும் இருக்கிறார்கள்.
இதனிடையே, அவர்கள் கடைசியாகத் தயாரித்து வெளிவந்த 'லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. வசூலிலும், வரவேற்பிலும் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தன. மலையாளத்தில் அவர்கள் இணைந்து தயாரித்த 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதாகவும் சொன்னார்கள். ஆனாலும், பெயரளவில் அவர்களது பெயர் பட விளம்பரங்களில் இடம் பெற்றது. அதனால், அந்த நிறுவனத்தைப் பற்றி பல்வேறு வதந்திகள் சில வாரங்களாக சுற்றி வந்தன. இந்நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில புதிய தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளன.
அவர்களது தயாரிப்பில் தற்போதுள்ள ஒரே படமாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்கும் படம் மட்டுமே இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட சிலர் அவர்களின் தயாரிப்பில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்கள். தற்போது சுமார் 10 படங்கள் வரையில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த முறை படத் தேர்விலும், கதைத் தேர்விலும், இயக்குனர் தேர்விலும் மிகவும் கவனமாக உள்ளார்கள் என்று தகவல். சீக்கிரமே அடுத்தடுத்து அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.