இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சஞ்சய் திரிபாதி இயக்கத்தில், அன்ஜினி தவான், பங்கஜ் கபூர், ராஜேஷ் குமார் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 27ம் தேதி வெளிவந்த ஹிந்திப் படம் 'பின்னி அன்ட் பேமிலி'. இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
லண்டனில் வசிக்கும் முரண்பட்ட குணம் கொண்ட டீன் ஏஜ் பெண்ணான பின்னி-க்கும், பீகார் மாநிலத்தில் சிறிய நகரத்தில் உள்ள அவரது பழமைவாத குணம் கொண்ட தாத்தா-வுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைதான் படத்தின் இப்படத்தின் கதை. இருவேறு குணம் கொண்ட அவர்களது வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமாக மாறுவதுதான் இப்படத்தின் ஹைலைட்.
லைகா நிறுவனம் தற்போது 'வேட்டையன்' படத்தைத் தயாரித்து முடித்து அக்டோபர் 10ம் தேதி வெளிடுகிறது. அடுத்து அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' தமிழ்ப் படத்தையும், மலையாளத்தில் 'எல் 2 எம்புரான்' படத்தையும் தயாரித்து வருகிறது. அப்படங்களுக்குப் பிறகான தயாரிப்பாக 'பின்னி அன்ட் பேமிலி' படம் தயாராகலாம்.