அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி. அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டது.
பெங்களூரூ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே அவருக்குச் சொந்தமான பார்ம் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. அவரது குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர் சில விசேஷமான நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்வார்கள். சென்னையிலும் சிரஞ்சீவிக்கு வீடு ஒன்று உள்ளது. தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத் செல்வது வரை அந்த வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.
தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.