பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் படங்களும் தயாரித்தார். இதற்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் கடன் பெற்று இருந்தார். ஆனால் அதை அவர் செலுத்தவில்லை. மாறாக அன்புச் செழியனிடம் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அதற்கு பதிலாக கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி நடக்காமல் விஷால் தனது ‛வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட்டார். இதனால் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு விவாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு விஷால் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடி தொகையை 30 சதவீதம் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.