Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு

14 பிப், 2026 - 09:59 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-song-case-Court-orders-AR-Rahman-to-pay-Rs-2-crore
Advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'வீரா ராஜ வீரா'என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் தனது தந்தை நசீர் பயாசதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதிக் பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷன் மீது டில்லி பாடகர் உஸ்தாத் டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். ஏ.ஆர்.ரஹ்மான், பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் மனுதாரருக்கு 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஏ.ஆர். ரஹ்மான் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாடகர் உஸ்தாத் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஏ.ஆர்.ரஹ்மான் ரூ 2 கோடியை டில்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கட்ட உத்தரவிட்டு, வழக்கை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இதன் மூலம் இந்த வழகில் ஏ.ஆர்.ரஹ்மானுகு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலைசெக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ... பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - mayiladuthurai,இந்தியா
19 பிப், 2026 - 11:02 Report Abuse
ram திருடப்பட்ட பாட்டு இதில் இவருக்கு இங்கு சான்ஸ் கொடுக்கவில்லையாம் என்ன உருட்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap