ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தமிழ் சினிமாவில் தற்போது கட்அவுட் கலாச்சாரம் குறைந்துவிட்டன. ஆனால் அரசியலில் இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் பெரிய கட்அவுட் என்று 'பைரவி' படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு வைத்த 100 அடி உயர ரஜினி கட்அவுட்டை சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே முதன் முறையாக மிக உயரமான கட்அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான்.
சிவாஜி நடித்த சரித்திர படங்களில் முக்கியமானதாக கருதப்படும் 'வணங்காமுடி' படத்திற்காக சென்னையின் மைய பகுதியில் இருந்த சித்ரா தியேட்டரில் 80 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது. இதனை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனம் அமைத்தது. இந்த கட்அவுட்தான் அதுவரையில் ஆசியாவில் அமைக்கப்பட்ட கட்அவுட்களில் பெரியது. அதனை அன்றைக்கு இருந்த மீடியாக்கள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டது.
'வணங்காமுடி' படத்தை பி.புல்லையா இயக்கினார். சிவாஜியுடன் நாகய்யா, எம்.கே.ராதா, சாவித்ரி, நம்பியார், ராஜசுலோச்சனா, எம்.சரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1957ம் ஆண்டு வெளியானது.