காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சினிமா விளம்பர யுத்திகளில் முக்கியமானதாக இருந்தது கட்அவுட். படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் பிரமாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டது. பெரிய ஹீரோக்கள் என்றால் 100 அடி உயரம் வரைகூட கட்அவுட் வைக்கப்பட்டது. பின்னர் பொது இடங்களிலும் வைக்கப்பட்டது. கட்அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்த சில இளைஞர்கள் கீழே விழுந்து இறந்ததால் அரசு கட்அவுட்களை தடை செய்தது.
1940ல்தான் முதல் கட்அவுட் வைக்கப்பட்டது. ஆனால் அது ஹீரோவுக்கு அல்ல ஹீரோயினுக்கு, அதுவும் அறிமுக ஹீரோயினுக்கு. அன்றைக்கு முன்னணி இயக்குனராக இருந்த கே.சுப்ரமணியம், 'பக்த சேதா' என்ற படத்தை இயக்கினார். அவரே தயாரிக்கவும் செய்தார். அவரது கார் டிரைவர் மகள் ஜி.சுப்புலட்சுமியை நாயகி ஆக்கினார் கே.சுப்ரமணியம், நாயகன் பாபநாசம் சிவன். இவர்களுடன் கொத்தமங்கலம் சுப்பு, மாஸ்டர் திருமலை உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இது மகாபாரதத்தில் வரும் ஒரு கிளை கதை. அஸ்தினாபுரத்தின் புறநகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் வந்து விஷ்ணுவை வழிபடக்கூடாது என்ற சட்டம் இருந்தது. இதனை துரோணாச்சாரியார் கடுமையாக கடைபிடித்து வந்தார். அந்த சேரி பகுதியை சேர்ந்த சேதா என்கிற செருப்பு தொழிலாளி மகன் பிராமண பெண்ணை காதலிக்கிறார். இதனால் துரோணாச்சாரியர் சேதாவுக்கு கடும் தண்டனை வழங்குகிறார்.
உச்சகட்டமாக ஒரே இரவிற்குள் நீ ஆயிரம் ஜோடி செருப்புகளை தைத்து கொடுத்தால் உன் காதலை ஏற்று திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். சேதாவும் தயாரிக்க தொடங்குகிறார். ஆனால் அவரால் முடியாமல் மயங்கி விழுந்து விடுகிறார். மறுநாள் பார்த்தால் ஆயிரம் ஜோடி செருப்பு தயாராக உள்ளது. இது இறைவனின் விளையாட்டு என்று கருதும் துரோணாச்சாரியார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
புராணப் படம் என்றாலும் ஜாதி கலப்பு திருமணத்தை பேசிய விதத்தில் இந்த படம் கொண்டாடப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக சென்னை சட்டக் கல்லூரி எதிரில் ஜி.சுப்புலட்சுமிக்கு ஆளுயர கட்அவுட் வைக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு வாரமும் அந்த கட்அவுட்டிற்கு புதிது புதிதாக பட்டுச் சேலையும் அணிவிக்கப்பட்டது.