பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் |
2024ம் ஆண்டின் கடைசி மாதத்தின் இரண்டாவது வாரம் முடியப் போகிறது. கடந்த வாரம் டிசம்பர் 6ம் தேதி நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால், இந்த வாரம் டிசம்பர் 13ம் தேதி அதைவிட இரண்டு மடங்கு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினத்தில், “2கே லவ் ஸ்டோரி, மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், அந்த நாள், மௌனமே காதலாய், விடிஞ்சா எனக்கு கல்யாணம், மழையில் நனைகிறேன், தென் சென்னை, சூது கவ்வும் 2,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றில் கடைசி நேரத்தில் சில படங்கள் வெளியாகாமல் போகலாம்.
இந்தப் படங்களிலும் ஒரு சில படங்களைத்தான் வெளியீடு என பிரபலப்படுத்தி வருகிறார்கள். மற்ற படங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட படக்குழுவினரே கண்டு கொள்ளவில்லை. இப்படித்தான் பல படங்கள் வருவதும் போவதும் தெரியாமல் போகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் இந்த வருடம் வெளியாகிய படங்களின் எண்ணிக்கை 220ஐக் கடக்கும். கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 240க்கும் அதிகமான படங்கள் வெளியாகுமா என்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.