'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்க, மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி, எம். எஸ். பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை போலவே கலகலப்பான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருப்பது டீஸரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பொண்ணுங்களோட கற்பனையில் மட்டும் தான் நிம்மதியாக வாழ முடியும். கல்யாணம் பண்ணிக்கிட்டா நிம்மதியே போயிடும் என்று மிர்ச்சி சிவா பேசும் வசனம் வைரலாகி வருகிறது. சூதுகவ்வும் படத்தின் டிரைலர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.