நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் | மார்க்கெட் சரிந்தாலும் பிடிவாதம்: அதிர்ச்சி கொடுத்த தாரா நடிகை | தனுஷூக்கு உதவி இயக்குநர், விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாபா பாஸ்கர்! | விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணியில் ‛இரண்டு வானம்' |
தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த நிறுவனம். மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க 'எல் 2 எம்புரான்' படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதிக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் பதிவிடவில்லை. மேலும், முன்னரே அறிவித்தபடி மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்குப் பதிலாக கோகுலம் சினிமாஸ் நிறுவனம் உள்ளே நுழைந்துள்ளது. நடிகர் மோகன்லால் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில் லைக்கா நிறுவனத்தை அவர் 'டேக்' செய்யவில்லை. பட வெளியீட்டு விவகாரத்தில் லைக்கா நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.