சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு வயது 58. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போதும் வெவ்வேறு மொழி படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ள ஏஆர் ரஹ்மான், இன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஏஆர் ரஹ்மானின் சகோதரி பாத்திமா கூறுகையில், ‛‛தொடர் பயணங்களால் அதிக களைப்பில் ரஹ்மான் இருந்தார். அதற்காக எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைதான். தற்போது உடல்நலம் சீராக உள்ளது. பயப்படும்படி எதுவும் இல்லை'' எனக் கூறியுள்ளார்.
தற்போது, அவர் உடல்நலம் தேறி, காலை 11 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தும், அவர் தொடர் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.