‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் | அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த முக்கியமான படங்களில் ஒன்று 'கைதி'. இன்றைய ஸ்டார் இயக்குனர்களில் ஒருவராக உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம். 2019ல் வெளிவந்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கெனவே அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து வேறு படங்களை இயக்கி வந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்பு 'கைதி 2' படத்தை இயக்க வருவார் என்று தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன்பு லோகேஷின் பிறந்தநாளன்று அவரை சந்தித்த கார்த்தி, அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'டில்லி ரிட்டர்ன்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். உடன் 'கைதி, கைதி 2' படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு உடனிருந்தார்.
'கைதி 2' படப்பிடிப்பு இவ்வருடக் கடைசியில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. கைதி 2ம் பாகத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரிப்பதாக கூறப்படுகிறது.