பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவது என்பது அபூர்வமாக நடக்கும் ஒரு விஷயம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அப்படித்தான் இருக்கிறது. 22 வருடங்களுக்கு முன்பு புதுமுகங்களான பிரசன்னா, கனிகா, கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் நடிக்க, மணிரத்னம் தயாரிக்க, சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த 'பைவ் ஸ்டார்' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம்.
கனிகா பின்னர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். பிரசன்னா சில பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து, நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்து, இப்போது பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கிருஷ்ணா, அதன்பின் 'திருடா திருடி' படத்தில் தனுஷ் அண்ணனாக நடித்தார். 'அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். எண்ணற்ற விளம்பரப் படங்களை இயக்க ஆரம்பித்த கிருஷ்ணா இப்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் என்ற பெயரில் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகராக அறிமுகமாகி 22 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா. சினிமாவில் இப்படியான அபூர்வம் எப்போதாவது நடப்பதுண்டு.