ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சினிமா உலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு அதிர்ஷ்டம், இல்லை, இல்லை, பேரதிர்ஷ்டம் கன்னட இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு அமைந்தது. 2022ல் சுமார் 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்தப் படத்திற்காக ரிஷப் வாங்கிய சம்பளம் வெறும் 4 கோடி என்கிறார்கள்.
ஆனால், தற்போது உருவாகி வரும் 'காந்தாரா' படத்தின் முன் பகுதி படமான 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ரிஷப் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதம் பங்கைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் இன்னும் அதிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தை 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்கள். படத்தின் வியாபாரம் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறதாம்.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் 2 கோடி சம்பளம் வாங்கினால் கூடவே ஒரு கோடி கூடுதலாக சம்பளம் கேட்பதுதான் வழக்கம். ரிஷப் கேட்கும் சம்பளத்தைக் கணக்கிட்டால் அது 25 மடங்கு அதிகமாக இருக்கிறது.