ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக சில நடிகர்களின் படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகவில்லை. திட்டமிட்டபடி படங்களை வெளியிட முடியாமல் சில படங்கள் முடங்கிப் போயுள்ளன. சில படங்களை வந்த விலைக்கு ஓடிடி தளங்களில் விற்றுவிட்டார்கள். இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது திரையுலகத்தில் உள்ள பலருக்கு ஆச்சரியத்தையும், பொறாமையையும் அளித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆர்யாவுக்கு மீண்டும் ஒரு பெரிய பெயரை அப்படம் பெற்றுத் தந்தது. அதனால், அவர் நடித்து வரும் படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது.
அந்த வகையில் அவர் தனி கதாநாயகனாக நடித்த 'அரண்மனை 3', விஷாலுடன் இணைந்து நடித்த 'எனிமி' ஆகிய படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. 'அரண்மனை 3' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மொத்த உரிமையையும் வாங்கி வெளியிடுகிறது.
'அரண்மனை 3, எனிமி' ஆகிய இரண்டு படங்களும் அக்டோபர் 14 அன்று ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் வெளியாக உள்ளது. ஒரே நாளில் ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாவதுதான் திரையுலகில் பேச்சாக உள்ளது.
முன்பெல்லாம் ஒரு ஹீரோவின் படத்தை ஒரே நாளில் வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுத்திருந்தார்கள். ஆனால், இந்தப் படங்களைப் பொறுத்தவரையில் 'எனிமி' படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லிவிடுவார்கள். மேலும், 'அரண்மனை 3' படத்தை உதயநிதி வெளியிடுவதால் அதற்கு யாரும் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள்.
'டெடி', 'சார்பட்டா பரம்பரை' படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் ஆர்யாவுக்கு இந்த வருடம் நான்கு ஜாக்பாட் தான்.