மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள மலையாள நடிகர் பஹத் பாசில், வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களில் நடித்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். அதேபோல கமலுடன் இணைந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் பஹத், கமலிடம் கேட்பதற்கென ஒரு கேள்வியை வைத்துள்ளாராம்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கமலின் மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா ஆகிய படங்களை பார்த்து வியந்துள்ளேன். அவரை நேரில் பார்க்கும்போது இதயெல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிந்தது என்கிற ஒரே ஒரு கேள்வியை மட்டும் அவரிடம் கேட்க போகிறேன்” என கூறியுள்ளார் பஹத் பாசில்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமல் தனது தசாவதாரம் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டபோது, அவரிடம் 'மைக்கேல் மதன காமராஜன்' படம் உருவான விதம் பற்றி சொல்லுங்கள் என மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.