சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் அலையாக பரவிய போது ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் அதிகம் வெளியானாலும் ஓரிரு பெரிய பட்ஜெட் படங்களும், சில முன்னணி நடிகர்களின் படங்களும் தான் அப்படி ஓடிடியில் வெளியானது.
இதுவரையில் ஓடிடியில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் என்று பார்த்தால் சூர்யாவின் 'சூரரைப் போற்று', மாதவன் நடித்த 'சைலன்ஸ்', ஜெயம் ரவி நடித்த 'பூமி', ஆர்யா நடித்த 'டெடி' ஆகிய மூன்று படங்களைச் சொல்லலாம்.
ஆர்யா நடித்த 'டெடி' இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு சிறுவர், சிறுமியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள அடுத்த படமான 'சார்பட்டா பரம்பரை' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் ஜுலை 22ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிட வேண்டிய ஒன்று. தியேட்டர்களுக்குப் படம் போகவில்லை என்றாலும் ஓடிடியில் படங்கள் வெளியாவதால் ஆர்யாவுக்கு ரசிகர்களிடத்தில் எளிதில் சென்று சேர வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ஆர்யா அடுத்து 'அரண்மனை 2, எனிமி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.