நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் |

சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில், அகத்தியன் இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், தேவயானி மற்றும் பலர் நடித்து ஜுலை 12, 1996ம் ஆண்டு வெளிவந்த படம் 'காதல் கோட்டை'.
தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஒரு ஹீரோவாக மிகப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படம் இது. அப்படம் வெளிவந்து 25 ஆண்டு முடியப் போகிறது. அதைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இன்று 'காதல் கோட்டை' படக்குழுவினருக்காக சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த சந்திப்பு பற்றி 'காதல் கோட்டை' படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் அவரது முகப்புத்தகத்தில் , "காதல் கோட்டை" திரைப்படம் வெளியாகி நாளையுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எட்டாவது படம். படத்தை உருவாக்க எங்கள் குழு பணியாற்றிய நாட்களை பின்னோக்கி அசை போடுகின்றேன். நாளை காலை பதினோரு மணி அளவில் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் சந்திப்பை நான் வணங்கும் நண்பர், தயாரிப்பாளர் திரு. சிவசக்தி பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். மீண்டும் பழைய நண்பர்களுடன் பழைய நாட்களுக்குச்சென்று உரையாடி கலந்து மகிழும் அந்நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
'காதல் கோட்டை' படத்திற்குப் பிறகு அப்படத்தின் தயாரிப்பாளரின் தயாரிப்பிலோ, இயக்குனர் அகத்தியன் இயக்கத்திலோ அஜித் மீண்டும் நடிக்கவேயில்லை.