மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
மலையாளத்தில் குறூப், சல்யூட், தமிழில் ஹே ஷினாமிகா என மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், ஏற்கனவே கொரோனா அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தெலுங்கு படத்தில் தற்போது நடிக்க துவங்கி விட்டார். மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான், அங்குள்ள ஜிம் ஒன்றில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவருடன் கூடவே சகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஜோடியாக நடித்து வரும் தேவ் மோகன் என்பவரும் ஜிம் கூட்டாளியாக இணைந்துள்ளார். இவர் சூபியும் சுஜாதையும் படத்தில் அதிதி ராவ் காதலனாக அறிமுகமானவர்.
துல்கர் சல்மானும் தானும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தேவ் மோகன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.