அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதனால் இதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதை முடித்துவிட்டு மீண்டும் புஷ்பா-2வுக்கு திரும்பலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ புஷ்பாவின் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர முடித்துவிட்டு அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க செல்லட்டும் என நினைக்கிறாராம். காரணம் புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்து ரப் அன்ட் டப்பான ஆளாக மாறியுள்ளதோடு, உடல் எடையையும் கூட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
இன்னொரு படத்தில் நடித்துவிட்டு வந்தால் மீண்டும் கெட்டப் மாற்றி இரண்டாம் பாகத்தை முடிக்க தாமதமாகி விடும் என தயாரிப்பாளர் கருதுகிறாராம். இருந்தாலும் இதை அல்லு அர்ஜுனிடம் எப்படி சொல்வது என இயக்குனர் சுகுமார் தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.