ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சிவகுமார், சத்யராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாம் சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். அப்படியே அவசியத்துக்காக சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அதிலும் டபுள் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நம் முடைய தமிழ்நாடு அரசாங்கம் சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.
நான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட் டுக்கொண்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். இதனை செய்து நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். கொரோனாவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.